பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..

by Chandru, Dec 14, 2019, 22:28 PM IST
Share Tweet Whatsapp

அட்லி இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங் களில் நடித்துள்ள படம் பிகில். தீபாவளி தினத்தில் வெளியான இப்படம் பல இடங் களில் வசூல் சாதனை படைத்து 50 நாட்கள் ஓடி வெற்றி பெற்றிருக்கிறது.  உலகம் முழுவதும் 300 கோடி வசூலித்திருப்பதாக ஏற்கனவே கூறப்பட்டது.

பிகில் 50வது நாள் நிறைவடைந்திருக்கும் நிலையில் அப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி தனது மகிழ்ச்சியை பதிவு செய்திருக்கிறார். 50 நாள் ஓடி வெற்றி பெற்றிருக்கும் பிகில் படம் தமிழ் படங்களிலேயே மிக அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

இந்த நேரத்தில் மகிழ்ச்சியான இந்த தகவலை அனைவரிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இப்படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த ரசிகர்களுக்கும், படத்தில் பணியாற்றிய அனைவருக்கும்  நன்றி' என குறிப்பிட்டிருக்கிறார்.

பிகில் 50வது நாள் வெற்றியை தளபதி ரசிகர்கள் நெட்டில் கொண்டாடி வருகின்றனர்.


Leave a reply