ஹீரோ படத்தை விட்டு வெளியேறும் ஹீரோ...சிவகார்த்திகேயனா, விஜயதேவரகொண்டாவா?

by Chandru, Dec 16, 2019, 09:49 AM IST
Share Tweet Whatsapp

தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு ஹீரோ என பெயரிடப்பட்டது. அதேபோல் தெலுங்கில் விஜயதேவர கொண்டா நடிக்கும் படத்துக்கும் ஹீரோ என டைட்டில் வைக்கப்பட்டது. இதையடுத்து தலைப்புக்கு இருவருமே உரிமை கொண்டாடினார்கள். சிவகார்த்திகேயன் படம் முடிந்திருக்கிறது. விஜய தேவரகொண்ட படத்துக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.

அர்ஜூன் ரெட்டி தெலுங்கு படத்தில் நடித்தது போலவே புதிதாக உருவாகும் ஹீரோ படத்திலும் விஜயதேவரகொண்டா நடிக்கிறார் என்று பட இயக்குனர் புகார் கூறியுதுடன் இப்படத்தில் புதிய பரிமாணத்தில் நடிப்பை வெளியிட கேட்டாராம். இதையடுத்து விஜயதேவரகொண்டாவுக்கும் இயக்குனருக்கும் மோதல் ஏற்பட்டது.

தற்போது ஹீரோ படத்தை கிடப்பில் வைத்துவிட்டு வேறு படப்பிடிப்பில் நடிக்கச் சென்றுவிட்டாராம். இதையடுத்து ஹீரோ படம் டிராப் ஆகும் சூழல் எழுந்துள்ளதாக பட வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.


Leave a reply