தமன்னாவை தொடர்ந்து ஹீரோவுக்கு குறிவைக்கும் சுனைனா...போட்டியில் ஜெயிக்கப்போவது யார்?

by Chandru, Dec 16, 2019, 09:40 AM IST
Share Tweet Whatsapp

பாலிவுட்டில் நடிக்கச் செல்ல விரும்பும் ஹீரோயின்கள் அங்குள்ள யாரையாவது ஃபிரண்ட் ஆக்கிக்கொள்ள வேண்டி உள்ளது. நட்பு வட்டாரங்களை உதவிவுடன் சில நடிகைகள் இந்தியில் நடிக்கச் சென்றிருக்கின்றனர்.

அசின், இலியானா, டாப்ஸி, காஜல் அகர்வால், தமன்னா என இப்பட்டியல் நீள்கிறது. அங்குள்ள ஹீரோயின்களின் போட்டியை சமாளிக்க முடியாமல் போன வேகத்திலேயே திரும்பிவந்த நடிகைகளும் உண்டு. ஆனாலும் இலியானா, டாப்ஸி, தமன்னா முயற்சியை கைவிடவில்லை. இவர்களில் டாப்ஸி ஓரளவுக்கு தேறியிருக்கிறார்.

தமன்னாவுக்கு ஹிருத்திக் ரோஷனுடன் நடிக்க வேண்டும் ஆசை. அந்த ஆசையை வேறுவிதமாக வெளிப்படுத்தினார். அதாவது, இதுவரை நான் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடித்ததில்லை அப்படி யொருவேளை நடிக்க வேண்டிய சூழல் வந்தால் ஹிருத்திக் ரோஷன் உடன் மட்டும்தான் லிப் டு லிப் கிஸ் கொடுத்து நடிப்பேன் என்று கிக்காக ஒரு பேட்டியை சில வாரங்களுக்கு முன் அவிழ்த்துவிட்டார்.

அது எந்தளவுக்கு பட வாய்ப்பை பெற்றத்தரும் என்பது தெரியவில்லை. தற்போது நடிகை சுனைனா வுக்கும் இந்தி பட ஆசை வந்துவிட்டதுபோல் தெரிகிறது. இவர் தமிழில் காதலில் விழுந்தேன், மாசிலா மணி, நிலா நிலா ஓடிவா போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இவரும் தமன்னாவைப்போலவே ஹிருத்திக் ரோஷன் மீதுதான் கண்வைத்திருக்கிறார்.

உங்களுக்கு பிடித்த நடிகர் யார், யார் மீதாவது உங்களுக்கு கிரஷ் (ஈர்ப்பு ) உள்ளதா என்றதற்கு 'எனக்கு ஹிருத்திக் ரோஷன் மீது ஈர்ப்பு வந்துள்ளது' என்றார். சுனைனா எய்திருக்கும் இந்த அம்பு இந்தி பட வாய்ப் பாக மாறுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a reply