நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா?.. மனதில் நடிகை லிசியுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி நெகிழ்ந்த இயக்குனர்..

by Chandru, Dec 16, 2019, 09:21 AM IST
Share Tweet Whatsapp

நிமிர், காஞ்சிவரம், லேசா லேசா போன்ற தமிழ் படங்கள் தவிர இந்தி, மலையாள மொழிகளில் பல்வேறு படங்களை இயக்கியவர் பிரியதர்ஷன். கடந்த 1990ம் ஆண்ட டிசம்பர் மாதம் 13ம் தேதி  நடிகை லிசியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  

25 வருடம் இல்லற வாழ்வில் இணைந்திருந்தவர்கள் திடீரென்று ஏற்பட்ட மனக்கசப்பில் விவாகரத்து பெற்று பிரிந்தனர். லிசியை பொறுத்தவரை தமிழில் விக்ரம், ஆனந்த ஆராதனை, மனசுக்குள் மத்தாப்பு போன்ற படங்களில் நடித்திருக்கிறார். திருமணத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார்.

நேற்றுமுன் தினம் 13ம் தேதியன்று பிரியதர்ஷன் திருமண நாள் நினைவுக்கு வந்தது. மனதில் லிசியுடன் வாழ்ந்த நாட்களை எண்ணி நெகிழ்ந்தவர்  இணைய தள டிவிட்டர் பக்கத்தில் தனது உணர்வை, நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா? என்ற ரேஞ்சுக்கு வெளிப்படுத்தினார்.  

'நினைவுகளுக்கு என்றும் மரணமில்லை... டிசம்பர் 13 1990' என எழுதியிருக்கும் பிரியதர்ஷன்   தனது திருமண நாளையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.

பிரியதர்ஷன், லிசிக்கு கல்யாணி என்ற மகள், சித்தார்த் என்ற மகன் உள்ளனர். கல்யாணி தற்போது கதாநாயகியாக படங்களில் நடித்து வருகிறார். பிரியதர்ஷனின் கல்யாண நாள் டிவிட் மீண்டும் லிசியை அவரது வாழ்க்கையோடு இணைத்து வைக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்கின்றனர் ரசிகர்கள்.


Leave a reply