மூத்த தலைமுறை, இளைய  தலைமுறை இணையும் விழா.. சரோஜாதேவி, சவுகார்ஜானகி பங்கேற்பு..

by Chandru, Dec 16, 2019, 09:09 AM IST
Share Tweet Whatsapp

50 ஆண்டுகளை கடந்து திரையுலகில் இன்றைக்கும் உயிர்ப்போடு இருக்கும் ஒன்றிரண்டு பட நிறுவனகளில் முக்தா பிலிம்ஸ் ஒன்று. உடன் பிறந்த சகோதரர்கள் முக்தா ராமசாமி, முக்தா சீனிவாசன் இப்பட நிறுவனத்தை நிறுவினார்கள்.

சிவாஜி, கமல் முதல் பாண்டியராஜன் படங்கள் வரை பல்வேறு நட்சத்திரங்கள் நடித்த படங்களை தயாரித்ததுடன் அந்தமான் காதலி, கீழ்வானம் சிவக்கும், சிம்லா ஸ்பெஷல், சூரியகாந்தி, அன்பைத்தேடி, கதாநாயகன், பொம்மலாட்டம் உள்பட பல்வேறு படங்களை இயக்கி உள்ளார் முக்தா வி,சீனிவாசன்.

தற்போது முக்தா பிலிம்ஸ் 60 ஆண்டு நிறைவு செய்கிறது. இதையடுத்து முக்தா ராமசாமி. முக்தா சீனிவாசன் குடும்பத்தினர் இணைந்து விழா நடத்த முடிவு செய்துள்ளனர். வரும் 22ம் தேதி சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் குமாரராஜா ஹாலில் மாலை 5 மணிக்கு நடக்கிறது.

அந்த காலம் முதல் இந்த காலம் வரை இந்நிறுவனத்தில் நடித்த மற்றும் பணியாற்றிய தொழில் நுட்ப கலைஞர்கள் வரை அனவருக்கும் கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட உள்ளனர். சவுக்கார் ஜானகி, சரோஜா தேவி உள்ளிட்ட பல பழ்ம்பெரும் நடிகைகள் மற்றும் நடிகர்கள், பாடகர்கள். இசை அமைப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.


Leave a reply