குறும்படங்களை இயக்கியவர்கள் முழு நீள படங்கள் இயக்குனர்கள் ஆனதுபோல் தற்போது யூ டியூபில் கலக்கியவர்கள் சினிமாவில் நுழைந்து வருகின்றனர். ஏற்கெனவே ஹிப் ஹாப் ஆதி நடிகர் ஆகியிருக்கிறார்.
அடுத்து யூ டியூபில் நகைச்சுவை மற்றும் சட்டையர் கதாபாத்திரங்களில் நடித்து வந்து கோபி, சுதாகர் ஆகிய இருவரும் தற்போது திரைப்பட நடிகர்கள் ஆகியிருக்கிறார்கள்.
ஹே மணி கம் டுடே கோடுமாரேயா' என்று வடிவேலு பேசிய வசனம் படத்துக்கு தலைப்பாக வைத்திருக்கின்றனர். படத்தை எஸ்ஏகே இயக்குகிறார். அவர் கூறும்போது, நகைச்சுவை கதை என்பதால் வடிவேலு பேசிய ஹே மணி கம் டுடே கோ டுமாரோ வசனம் தலைப்பாக வைக்கப்பட்டது. கோபி, சுதாகர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்றார்.
நிஜாய் ஒளிப்பதிவு . ஜேக்ஸ் பிஜாய் இசை. இப்படத்தில் 24 நாடுகளை சேர்ந்த 28 ஆயிரம்பேர் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் இப்படம் தயாரிக்கப்படுகிறது. அனைவரும் இணைந்து சுமார் ரூ, 6 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கின்றனர்.