நடிகர் அமிதாப்பச்சன் கடந்த மாதம் மூச்சு திணறல் ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். வெளியில் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர் கூறினர்.
அமிதாப் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிக்க உறையவைக்கும் பனிமலைகள் கொண்ட சுலோவிகா நாட்டில் சென்று மைனஸ் 14 டிகிரி குளிர் பிரதேசத்தில் நடந்த ஹூட்டிங்கில் பங்கேற்றிருக்கிறார்.
செஹேரே என்ற பெயரில் உருவாகும் இப்படத்திற்காக நடுங்கும் குளிரில் அமிதாப் கம்பளி ஷொவட்டர், குல்லா அணிந்து நடித்தபோது எடுத்த புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.