மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர்.
கதிரவன், முதல் கனவே, சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இனி தமிழ்பக்கம் தலைகாட்டமாட்டேன் என்ற முடிவோடு இருப்பதுபோல் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதற்கு என்ன காரணம். அவரே சொல்கிறார்.
ஒரு சில படங்கள் தமிழில் நடித்தேன். அதுவொரு கடினமான தருணமாகவே இருந்தது.
பட வாய்ப்பு வரும்போது உடனிருக்கும் மேனேஜர், இந்த படத்தில் நடியுங்கள் முன்னணியிடத்துக்கு போய்விடுவீர்கள் என்பார்கள். அதை நம்பி நடித்தால் அது ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல் ஆகிவிடும். தவிர எனக்கு நடிப்பை வெளிப்படுத்தக் கூடிய நல்ல கதாபாத்திரங்களும் கிடைக்க வில்லை. ஒரு சிலர் மனது கஷ்டப்படும் அளவுக்கு பேசுவார்கள். இந்த அனுபவம்தான் என்னை தமிழ் படங்கள் மீது வைத்திருந்த கவனத்தை திசை திருப்பிவிட்டது.
இவ்வாறு ஹனிரோஸ் கூறினார்.