இந்தி மற்றும் மராட்டியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஸ்ரீராம் லாகூ (வயது 92). இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
அவரது மறைவுக்க பிரத்மர் மோடி, மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்ரே, மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இரங்கல் தெரிவித்தனர். பல்வேறு இந்தி மராட்டி நடிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
ஸ்ரீராம் லாகூ நடித்த சின்ஹசன், பின்ஞ்ரா, முக்தா போன்ற படங்கள் பிரபலமாக பேசப்பட்டது. 40க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கும் லாகூ தனிப்பட்ட முறையில் 20 நாடகங்கள் இயக்கி இருக்கிறார். 1978ம் ஆண்டு கரோண்டா என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றிருக்கிறார். அடிப்படையில் லாகூ ஒரு டாக்டர். நடிப்பின் இருந்த ஆசையால் டாக்டர் தொழிலை விட்டு நடிப்பதுறைக்கு வந்தார்.