புதியதாக விஜய், அஜீத்தை உருவாக்குவோம்.. கபாலி டைரக்டர் பா.ரஞ்சித் சபதம்..

கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். கடந்த ஆண்டு மே மாதம் காலா படம் திரைக்கு வந்தது. அதன்பிறகு புதிய படம் எதுவும் இயக்கவில்லை.

ஆனால் தொடர்ந்து தனது நீலம் பட நிறுவனம் சார்பில் கதிர் நடித்த பரியேறும் பெருமாள், தினேஷ் நடித்து குண்டு படங்களை தயாரித்தார். இரண்டு படங்களும் வெற்றியை இலக்கை தொட்டதையடுத்து 5 புதிய படங்கள் தயரிக்க முடிவு செய்துள்ளார். அவருடன் தயாரிப்பில் தனுஷ் நடித்த ஹாலிவுட் படம் 'பக்ரி' படத்தை தயாரித்த கோல்டன் ரேஷியோ, லிட்டில் ரெட்கார் நிறுவனத்தை சேர்ந்த அதிதி ஆனந்த் மற்றும் பியூஷ் சிங், அபயானந்த் சிங் ஆகியோர் கைகோர்க்கின்றனர். அவர்கள் அனைவரும் சென்னையில் பேட்டி அளித்தனர்.

புதிய படங்களை பரியேறம் பெருமாள் பட இயக்கனர் மாரி செல்வராஜ், மேற்கு தொடர்ச்சி மலை படத்தை இயக்கிய லெனின் பாரதி மற்றும் ரஞ்சித்திடம் உதவியாளர்களாக இருந்த சுரேஷ் மாரி, அகிரன் மோசஸ், பிராங்க்ளின் ஆகியோர் தலா ஒரு படம் இயக்குகின்றனர்.
இதுபற்றி இயக்குனர் பா.ரஞ்சித் கூறும்போது,'ஒடுக்கப்பட்டவர்களின் கதைகளாக மெட்ராஸ், அட்டகத்தி படங்களை இயக்கியபோது எப்படி ஏற்பார்களோ என்ற பயம் இருந்தது. ஆனால் அதை மக்கள் நல்லவிதமாக ஏற்று வரவேற்றார்கள்.

ஒரு சமுதாயத்தினருடைய கதையாக இருந்தாலும் வேறு யாருடைய மனதும் புண்படாத வகையில்தான் எனது படங்கள் அமைக்கப்படுகின்றன. தொடர்ந்து தயாரிக்க உள்ள 5 படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தளத்தில் இருக்கும். இப்படங்கள் தயாரிப்பதற்கு குறைந்த பட்சம் ஒன்றரை வருடங்கள் ஆகும். ப்ராங்க்ளின், லெனின் பாரதி இயக்கும் 2 படங்கள் முதலில் படப்பிடிப்பு தொடங்கும். இப்படத்தில் நடிக்கும் நடசத்திரங்கள் யார் யார் என்பது விரைவில் முடிவாகும்.

அஜீத், விஜய் போன்ற பெரிய நடிகர்கள் நடிக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். அவர்கள் இதில் நடிக்கவில்லை ஆனால் அவர்களைப்போன்ற பெரிய நடிகர்களை உருவாக்குவோம். நான் படம் இயக்குவது எப்போது என்கிறார்கள். ஏற்கனவே ஒரு படம் இயக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். மேலும் ஒரு சில தயாரிப்பாளரகள் இயக்க கேட்டிருக்கின்றனர். அதுபற்றி விரைவில் அறிவிப்பேன் என்றார் பா.ரஞ்சித்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
don-t-want-to-answer-idiots-nayanthara-kattam-on-the-red-tea-issue
முட்டாள்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை... செம்பருத்தி டீ விவகாரத்தில் நயன்தாரா காட்டம்
coming-to-film-promotion-3-lakhs-to-give-actress-aparnitha-over-game
பட புரமோஷனுக்கு வரனுமா? 3 லட்சம் தரணும்... நடிகை அபர்ணிதா ஓவர் ஆட்டம்... சுரேஷ் காமாட்சி காட்டம்
actress-varalakshmi-marriage
நடிகை வரலட்சுமி திருமணம்... சரத்குமார் அட்டகாச ஆட்டம்... தாய்லாந்தில் களை கட்டும் திருமணம்
director-vasanthabalan-tested-covid-positive
கொரோனா தொற்று உறுதி – மருத்துவமனையில் இயக்குநர் வசந்தபாலன் அனுமதி
ratchasan-2-part-is-on-the-way
ராட்சசன் 2வது பாகம் தயார்.. விஷ்ணு விஷால் இன்ப அதிர்ச்சி..!
deepika-padukone-tests-positive-for-covid-19
நடிகை தீபிக படுகோனுக்கு என்ன ஆச்சு? – ரசிகர்கள் கலக்கம்!
priya-bhavani-shankar-hits-back-to-the-trolls
சீட்ட தூக்கிட்டு நில்லுன்னு அர்த்தமில்ல – பிரியா பவானி சங்கரின் மிரட்டல் அடி!
pia-bajpai-brother-passes-away-due-to-covid-19
மருத்துவ உதவி கேட்டு அலைந்த பிரபல நடிகைக்கு நிகழ்ந்த சோகம்!
arrahman-congrats-to-stalin
ஏ.ஆர்.ரஹ்மான் போட்ட ட்வீட்.. உடனே ரிப்ளே செய்த ஸ்டாலின் – வைரலாகும் பதிவு!
rashmika-mandanna-says-rcb-is-her-favourite-team-gone-viral
ஐபிஎல் அணி குறித்து நடிகை ராஷ்மிகா என்ன சொன்னார் தெரியுமா?
Tag Clouds