போலீஸ் இன்ஸ்பெக்டராக சிம்பு நடித்த ஒஸ்தி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ரிச்சா கங்கோபாத்யாய். இதையடுத்து செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கம் என்ன படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.
தமிழில் வாய்ப்பு இல்லாததால் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்றார். இந்நிலையில் காதல் விவகாரத்தில் சிக்கினார் ரிச்சா. இதையடுத்து நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு புறப்பட்டவர் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைகழகத்தில் எம்பிஏ படிப்பில் சேர்ந்தார்
கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் நிலையில் உடன் படித்து வந்த அமெரிக்க வாலிபர் ஜோ லாங்கெல்லாவுடன் காதல் மலர்ந்தது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். முன்னதாக கடந்த ஆண்டு இவர்களது திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. 2019ம் ஆண்டில் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். அதன்படி இந்து மற்றும் கிறிஸ்தவ மத முறைப்படி ரிச்சா, ஜோ லாங்கெல்லா நடைபெற்றது. இதில் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டனர்.