நடிகர் ராஜசேகர் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல்.. மீண்டும் பரீட்சை எழுதி பாஸானால்தான் கிடைக்கும்..

by Chandru, Dec 18, 2019, 19:03 PM IST

டாக்டர் ராஜசேகர் தடாலடி ஹீரோவாக நடித்து வந்தார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்த இதுதான்டா போலீஸ் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து மீசைக்காரன் போன்ற பல படங்களில் நடித்தார். தெலுங்கிலும் பரபரப் பான ஹீரோவாக நடித்து வந்தார்.

நடிக்கும்போதே நடிகை ஜீவிதா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு கட்டத்தில் அவரது மார்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. இதில் மனம் வெறுத்திருந்தார். தற்போது குணசித்ர கதாபாத்திங்கள் நடிக்க மட்டுமே வாய்ப்பு அவருக்கு வருகிறது.

படப்பிடிப்பில் பங்கேற்கும் ராஜசேகர் ஹைவே சாலைகளில் அதிகவேகமாக கார் ஓட்டுகிறார், குடித்துவிட்டு கார் ஓட்டுகிறார் என்று அவர் மீது புகார்கள் வந்தன. கடந்த மாதம் படப்பிடிப்பிலிருந்து வீடு திரும்பியபோது அவர் ஓட்டி வந்த கார் சாலைகளின் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி நொறுங்கியது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே இதுபோல் 2 விபத்துகளில் அவர் சிக்கியிருக்கிறார். அவையெல்லாம் போலீஸ் கேஸ் ஆகாமலும், கோர்ட்டுக்கு செல்லாமலும் பேசி தீர்க்கப்பட்டது.

இதற்கிடையில் 14 மாதத்தில் 3 விபத்துக்களை ஏற்படுத்தியதாக ராஜசேகர் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது இதையடுத்து ராஜசேகருக்கு வழங்கப்பட்டிருந்த கார் லைசென்ஸை ரத்து செய்தனர். இனி அவர் புதிதாக தேர்வில் பாஸ்செய்து தகுதியை நிரூபித்த பிறகுதான் லைசென்ஸ் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


More Cinema News

அதிகம் படித்தவை