தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தில்தான் இசை அமைப்பாளராக அறிமுகமானார் அனிருத். அடுத்து தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்திற்கும், தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்திற்கும் அவரே இசை அமைத்திருந்திருந்தார். திடீரென்று தனுஷ் அனிருத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
சிவகார்த்திகேயனுடன் அனிருத் நெருக்கம் ஆனார். இந்த நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க தனுஷுடனான இடைவெளி அதிகரித்துக்கொண்டேபோனது. தனுஷ் படத்திற்கு அனிருத் இசை அமைப்பதும் நின்றுபோனது.இதுபற்றி அரசல்புரசலாக தகவல் ரஜினிக்கு தெரியவந்தது.
சமீபத்தில் ரஜினி தன்னுடைய 70 வயது நட்சத்திர பிறந்தநாளை விழாவை கொண்டாடினார். அதில் குடும்பத்தினர்களுடன் உறவினர்களாக தனுஷ், அனிருதும் கலந்துகொண்டனர். அப்போது இருவரையும் அழைத்து பேசி மனம் விட்டு பேச வைத்தார். இதில் சமாதானம் அடைந்தனர்.. இதையடுத்த விரைவில் தனுஷ் படத்துக்கு அனிருத் இசை அமைக்கும் ஏற்பாடு நடக்கிறதாம்.