செல்வராகவனின் 2 வருட பெண்டிங் படம்.. ரிலீஸுக்கு ரெடியாகிறது..

by Chandru, Dec 19, 2019, 18:26 PM IST
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என ஹிட் படங்களாக தந்த இயக்குனர் செல்வராகவன் மீது யார் கண்பட்டதோ திடீரென்று அவரது படங்கள் சறுக்கிக்கொண்டே இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்புடன் வந்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் படங்கள் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடித்து உள்ள படம் 'நெஞ்சம் மறப்பதில்லை' இரண்டு ஆண்டுக்கு முன்பே இப்படம் ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. இதில் ரெஜினா, நந்திதா ஸ்வேதா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.ஆனால் தயாரிப்பு பிரச்னையால் இப்படம் ரிலீஸ் ஆகாமலிருந்தது.
சமீபத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தை செல்வராகவன் இயக்கினார். அதன்பிறகு அவருக்கு புது அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. 2 வருடம் முடங்கியிருந்த நெஞ்சம் மறப்பதில்லை படம் இம்மாத இறுதியில் வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என்ன காரணமோ கூகுல் விக்கிபிடியாவில் செல்வராகவனின் இயக்கிய படங்களின் பட்டியலில் நெஞ்சம் மறப்பதில்லை பட பெயரை காணவில்லை.


More Cinema News

அதிகம் படித்தவை