சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இளம் இயக்குனர்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறார். அல்லது இளவயது துள்ளல் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
கபாலி, காலாவில் வயதான தோற்றத்தில் நடித்த பிறகு பேட்ட, தர்பார் என இளவட்ட கதைகளில் ஜமாய்த்து வருகிறார் ரஜினி. அந்த வரிசையில் தளபதி விஜய்க்கு எழுதிய கதையில் நடிக்க ரஜினி ஒகே சொல்லியிருப்பதாக தகவல் பரவுகிறது. விஷயம் இதுதான்.
இயக்குனர் கவுதம் மேனன் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய் படத்தை இயக்கவிருந்தார். 'யோகன் அத்தியாயம் ஒன்று' என்று படத்துக்கு டைட்டிலும் வைத்து பர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிட்டார்.
திடீரென்று விஜய் அப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். கதையில் சில மாற்றங் களை செய்யச் சொன்னபோது அதை கவுதம் மேனன் ஏற்கவில்லையாம். அதுவே விஜய் விலகலுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
அந்த கதையைத்தான் தற்போது ரஜினிக்கு சொல்லி ஓ.கே வாங்கியிருக்கிறாராம் கவுதம் மேனன். ஆனால் இது எந்தளவுக்கு உறுதி என்பது கவுதம் மேனன் பதில் தந்தால்தான் தெரியவரும்.