அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்த மீனா அவரை அப்படத்தில் ரஜினி அங்கிள் என்று அழைப்பார். பின்னர் அவரே ரஜினியுடன் முத்து எஜமான் போன்ற படங்களில் ஜோடியாக நடித்தார். அதுபோல் பேபி மானஸி ரஜினியை சேட்டா (அண்ணன்) என்று அழைத்திருக்கிறார். இதுபற்றி நடிகர் திலீப் கூறியது:
மை சான்டா என்ற மலையாள படத்தில் என்னுடன் பேபி மானஸி நடிக்கிறார். ஏற்கனவே ரஜினியின் தர்பார் படத்தில் இவர் நடித்தார். படப்பிடிப்பில் என்னை அங்கிள் அங்கிள் என்று என்னை அழைத்தார். அப்படி அழைக்காதே சேட்டா (சகோதரன்) என்று அழை என சொன்னேன் அவர் மறுத்துவிட்டார். ரஜினியை எப்படி கூப்பிடுவே என்றேன்.
சேட்டா என்று அழைத்ததாக கூறினார். ஒருசமயத்தில் சிறுமியாக இருந்தபோது சேட்டா, சேட்டா என்று என்னை அழைத்த கீர்த்தி சுரேஷ், சனுஷா போன்றவர்கள் பின்னர் எனக்கு ஜோடியாக நடித்தனர். அதுபோல் ரஜினியை சேட்டா என்று அழைத்துள்ள பேபி மானஸி எதிர்காலத்தில் அவருடன் ஜோடியாக நடிக்க வாழ்த்துகிறேன்.