பாய்பிரண்ட் தோள் மீது ஏறிய பிரபல நடிகை.. இசை நிகழ்ச்சியில் கும்மாளம்..

by Chandru, Dec 21, 2019, 18:56 PM IST
Share Tweet Whatsapp

நடிகை காஜல் அகர்வால் தனக்கு காதலர் கிடைத்து விட்டார் என்பதை இணைய தள பக்கத்தில் லவ் சிம்பள் காட்டி உணர்த்தியிருந்தார். விரைவில் தொழில் அதிபருடன் திருமணம் நடக்க உள்ள தாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் பாய்பிரண்ட் தோள்மீது அமர்ந்து காஜல் அகர்வால் ஆட்டம் போட்ட புகைப்படம் ஒன்று நெட்டில் வெளியாகி உள்ளது. இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானின் இசை கச்சேரியில் கலந்துகொண்டபோதுதான் இப்படியொரு குத்தாட்டம் போட்டு பாய்பிரண்டின் தோள்மீது ஏறி ஆட்டம் போட்டாராம் காஜல்.

காஜல் அகர்வாலுக்கு  தற்போது கைவசம் அதிக படங்கள் இல்லை. கமலுடன் இந்தியன் 2ம் பாகத்தில் நடித்து வருகிறார். மேலும் அவர் ஏற்கனவே நடித்து முடித்திருக்கும் பாரிஸ் பாரிஸ் படம் திரைக்கு வராமல் முடங்கிக்கிடக்கிறது. தவிர இந்தியில் மும்பை சாகா, தெலுங்கில் மொசகல்லு படங்களில் நடித்து வருகிறார்.  இந்த படப்பிடிப்பு எல்லாமே தாமதமாகி வருகிறது.


Leave a reply