டிவி சீரியல்களின் மகாராணி ராதிகா நடித்த 'சித்தி' மெகா தொடர்தான். 1999ம் ஆண்டு ராதிகா நடித்த சித்தி தொடர் சன் டிவியில் ஒளிப்பரபானது. இன்றைக்கு 22 ஆண்டுகள் முடிந்திருக்கிறது. அந்த தொடரில் நடித்தபோதிலிருந்து ராதிகாவை சித்தி என்றே ரசிகர்கள் அழைக்கத் தொடங்கினார்.
'கண்ணின் மணி.. கண்ணின் மணி' என்ற பாட்டு ஒளிபரப்பாகும் போதிலிருந்தே சித்தி சீரியல் தொடங்குவதும் அதன் பரபரப்பும் பெண்கள் மத்தியில் தொடங்கிவிடும். வேலை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு டிவி முன் ஆஜராகிவிடுவார்கள்.
1999-ம் ஆண்டு தொடங்கி 2001-ம் ஆண்டு நவம்பர் 2-ம் தேதி வரை சித்தி தொடர் ஒளிபரப்பானது. ராதிகாவுடன இணைந்து சிவகுமார் நடித்திருந்தார். சித்தி 22 வது ஆண்டை நினைவு கூர்ந்திருக்கும் ராதிகா, சித்தியின் 2ம் பாகத்தை ஜனவரி முதல் பாருங்கள். இதனை சுந்தர் கே.விஜயன் இயக்குகிறார் என குறிப்பிட்டிருக்கிறார்.