சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.. துணை ஜனாதிபதி வழங்கினார்..

by Chandru, Dec 23, 2019, 21:18 PM IST

புதுடெல்லியில் உள்ள விக்யான் பவனில் 66-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலை வகித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனாதிபதி விழாவுக்கு தலைமை தாங்கி தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்குவது வழக்கம். இம்முறை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு தலைமை தாங்கி விருதுகள் வழங்கினார்.
மறைந்த நடிகை சாவித்ரி வாழ்க்கை கதையாக தெலுங்கில் உருவான மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) படத்தில் சாவித்ரி வேடம் ஏற்று நடித்த கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டிருந் தார். அவர் நேரில் வந்து துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிடமிருந்து விருதினை பெற்றுக்கொண்டார்.

பிரியா கிருஷ்ணசாமி இயக்கிய பாரம் என்ற தமிழ் படம் அதேபோல் திரைப்படமாக குஜராத்தி ஹெல்லாரோ ஆகியவை சிறந்த படங்களுக்கான விருது பெற்றன.
உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் படத்தில் நடித்த விக்கி கவுசல், 'அந்தாதூன்' படத்தில் நடித்த ஆயுஷ்மான் சிறந்த நடிகர்களுக்கான விருது பெற்றனர். சிறந்த இயக்குனர் ஆதித்யதர் (படம் :உரி: சர்ஜிக்கல் ஸ்டிரைக் ) பெற்றார்.

சிறந்த இசையமைப்பு (பாடல்கள்): சஞ்சய் லீலா பன்சாலி (பத்மாவத்), சிறந்த இசையமைப்பு ( பின்னணி இசை): யுரி, ஆக்‌‌ஷன் படம்: கேஜிஎப் (கன்னடம்),குழந்தைகள் படம்: சர்க்காரி அரியா பிரதமிக ஷாலி காசர்கோட், குழந்தை நட்சத்திரங்கள்: பி.வி. ரோஹித் (கன்னடம்),
துணை நடிகர்: ஸ்வானந்த் கிர்கிரே படம் கும்பக், சிறந்த துணை நடிகை: பாத்ஹை ஹோவின் சுரேகா சிக்ரி, சிறந்த தயாரிப்பு குமார சம்பவம் (மலையாளம்),
தேசிய ஒருமைப்பாட்டுக்கான படம்: ஒன்றல்ல இரடல்ல (கன்னடம்), பொழுது போக்கு படம்: பத்ஹாய் ஹோ. சமூக திரைப்படம்: பத்மன்.), ஸ்பெ‌ஷல் எபெக்ட்ஸ் கேஜிஎப், கல்வித் திரைப்படம்: சரளா விரளா, நடன அமைப்பு: குமார்(பத்மாவத்), ஒளிப்பதிவு: உல்லு (மலையாளம் பானி, பின்னணிப் பாடகி: பிந்து (கன்னடம்), பின்னணிப் பாடகர்: அரிஜித் சிங் (இந்தி) உள்பட மொத்தம் 31 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு திரைப்பட நட்பு மாநில விருது புதிதாக நிறுவப்பட்டது அதற்கானவிருதை உத்தராகண்ட் மாநிலம் பெற்றது.

விருது பெற்றவர்களுக்கு ஜனாதிபதி மாலையில் விருது வழங்குகிறார்.
66-வது தேசிய திரைப்பட விருதுகள் பெறுபவர்கள் யார் யார் என்ற விவரம் சென்ற ஆகஸ்டு மாதம் அறிவிக்கப்பட்டது.

You'r reading சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷ் தேசிய விருது பெற்றார்.. துணை ஜனாதிபதி வழங்கினார்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை