குடிப்பதை நிறுத்திய கவர்ச்சி நடிகை.. காணாமல் போய்விட்டேனா?

by Chandru, Dec 24, 2019, 09:07 AM IST

ரஜினிகாந்த் நடித்த குசேலன் படத்தில் வடிவேலு ஜோடியாக நடித்தவர் சோனா. குரு என் ஆளு. ஷாஜஹான் உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவரிச்சி மற்றும் காமெடி வேடத்தில் நடித்துள்ளவர் சோனா.

அடிக்கடி திரைபடங்களில் நடித்து வந்த சோனா திடீரென்று படங்களிலிருந்து காணாமல் போய்விட்டதாக இணைய தளத்தில் தகவல் பரவியது. இந்த தகவல் சோனாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் அறிக்கை வெளியிட்டார். அதில் கூறியதாவது:

என்னை திரைப்படங்களில் காணவில்லை என்று சிலர் கூறிவருவதுடன், ஏன் படங்களில் நடிப்ப தில்லை, நீங்கள் எங்கு போய்விட்டீர்கள் என கேட்கின்றனர். 2019ம் வருடத்தில் மட்டும் நான் 4 படங்களில் நடித்திருக்கிறேன். 12 படங்களை வேண்டாம் என நிராகரித்திருக்கிறேன். பணத்திற்காக ஓட வேண்டிய அவசியமில்லை. நிம்மதியாக இருக்க வேண்டும் என்று பயணித்து வருகிறேன். இப்போது நான் முதிர்ச்சியான மனோபாவத்தில் இருக்கிறேன். குடிப்பதை நிறுத்தி விட்டேன்.

சேஸிங், பரமபதம் விளையாட்டு, அசால்ட், தேடுதல், பச்ச மாங்கா உள்ளிட்ட படங்களில் இந்த ஆண்டு நடித்திருக்கிறேன்.

2020ம் ஆண்டு நல்ல கேரக்டர்கள் அமையும் என நம்புகிறேன்.

இவ்வாறு சோனா கூறி உள்ளார்.


Leave a reply