போராட்டத்துக்கு கங்கனா திடீர் எதிர்ப்பு.. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதா?

by Chandru, Dec 24, 2019, 18:46 PM IST

சமீபத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினார்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்திருந்த கங்கனா, கருத்து சொல்லாத பாலிவுட் நடிகர், நடிகைகளை, 'ஒரு நாளை 20 வேளை கண்ணாடி பார்க்க மட்டும்தான் தெரியும்' என்று சாடினார். தற்போது திடீரென்று போராட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார்.

'போராட்டங்கள் நடத்தும்போது கடைப்பிடிக்க வேண்டிய முதல் விஷயம் வன்முறையின்மைதான்.

மக்கள் தொகையில் 3 முதல் 4 சதவீதம் பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் அவர்கள் கட்டும் வரியை சார்ந்துள்ளனர்.போராட்டங்களின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தும் உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது' என காட்டமாக கேட்டிருக்கிறார்.

You'r reading போராட்டத்துக்கு கங்கனா திடீர் எதிர்ப்பு.. பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதா? Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை