தளபதி 64 நடிகை ரம்யாவுக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை தேவை? அவரே அளித்த பதில்..

by Chandru, Dec 28, 2019, 17:28 PM IST

துல்கர் சல்மான் நடித்த ஒ காதல் கண்மணி, விஜய்சேதுபதி நடித்த சங்கத் தமிழன், அமலாபால் நடித்த ஆடை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் ரம்யா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 64 படத்திலும் நடித்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா ரசிகர்களுடன் பேசினார். அவரிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர்.

'நீங்கள் எப்போது திருமணம் செய்வீர்கள் , மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும்' என்று ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த ரம்யா, '. நல்ல மனிதராக இருந்தால் நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். அவர் கறுப்பா, சிவப்பா என்பது முக்கியமல்ல. திருமணத்துக்கு நிறம் ஒரு தடை கிடையாது.

விஜய்யின் தளபதி 64 படத்தில் நடிப்பதற்கு பலரும் வாழ்த்து கூறினார்கள். அப்படத்தின் அப்டேட் வேண்டும் என பல ரசிகர்கள் என்னிடம் கேட்டனர். ஆனால் படம் பற்றி எந்தவொரு விஷயத்தையும் வெளியில் சொல்லக்கூடாது என்று பட குழுவினர் கடுமை யாக கண்டிஷன் போட்டிருக்கிறார்கள்' என்றார் ரம்யா.


Leave a reply