வீட்டு வேலைக்கார பெண்ணுக்கு பர்த் டே.. கேக் வெட்டி கொண்டாடிய இசை அமைப்பாளர்..

by Chandru, Dec 29, 2019, 17:59 PM IST

நான்கைந்து பேர் இருக்கும் நடுத்தர குடும்பத்திலேயே இப்போதெல்லாம் வேலைக்கு ஆள் இல்லாமல் எந்த வேலையும் நடப்பதில்லை. நட்சத்திரங்களின் வீடுகளில் ஒன்றுக்கு பத்து பேர் வேலையாட்கள் இருப்பது சகஜம்.

பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். அவரது வீட்டில் 7 வருடமாக லட்சமி என்ற பெண் வேலை செய்கிறார். அவரது பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து கூறிய ஹாரிஸ் ஜெயராஜ், கேக் வாங்கி வைத்து தனது வீட்டிலேயே லட்சுமியின் பிறந்த நாளை கொண்டாடினார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து மெசேஜ் பகிர்ந்திருக்கிறார். வீட்டு வேலைக்காரம் மாவுக்கு மரியாதை செய்த ஹாரிஸின் இந்த நிகழ்வுக்கு அவருக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


More Cinema News

அதிகம் படித்தவை