தளபதி 64 பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு.. புத்தாண்டைகொண்டாட ரசிகர்களுக்கு மாஸ் கிப்ட்..

by Chandru, Dec 29, 2019, 17:54 PM IST

விஜய் நடிக்கும் தளபதி 64 படப்பிடிப்பை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். கர்நாடகாவில் சிமோகா சிறையில் 3வது கட்டமாக இதன் படப் பிடிப்பு நடந்து முடிந்திருக்கிறது. விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன் நடித்த ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டன.

கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஒரு நாள் முன்னதாகவே படப்பிடிப்பை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டார். கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாட லண்டன் சென்றார். மாளவிகா மோகனனும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட வெளிநாடு புறப்பட்டார். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பக்கம் பறக்க விஜய்சேதுபதி நடிக்கும் சில முக்கிய காட்சிகள் சிமோக்காவில் படமானது. படப்பிடிப்பு முடிந்து அவரும் படக் குழுவினருடன் புத்தாண்டு கொண்டாட சென்னை திரும்பினார்.

புத்தாண்டை குடும்பத்துடன் குதூகலமாக கொண்டாடிவிட்டு மீண்டும் அனைவரும் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். இதற்கிடையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 'விஜய் 64' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 31ம் தேதி மாலை 5:30 மணிக்கு வெளியாகிறது.


Leave a reply