நெடுஞ்சாலை” ஹீரோ திடீர் பெயர் மாற்றம்.. ஆரி .. இனி ஆர் அர்ஜுனா..

by Chandru, Dec 30, 2019, 17:18 PM IST

நெடுஞ்சாலை படத்தில் கதாநாயகனாக நடித்தவர் ஆரி. அப்படம் அவருக்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது.

ஆனாலும் அடுத்தடுத்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் ஆரி தனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லா மல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக் கையும் அன்பும்தான், அதை நான் என்றும் மறவேன். இந்த புத்தாண்டு முதல் எனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியுள்ளேன்.

எனவே இனிவரும் காலங்களில் என் சம்பந்த மாக செய்தியை வெளியிடும்போதும் என்னை அழைக்கும்போதும் எனது பெயரை ஆரி அர்ஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடு மாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன். என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அர்ஜுனா.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
பெயர் மாற்றிய ராசி ஆரி அர்ஜுனாவுக்கு வரும் 2020ம் ஆண்டில் வெற்றி படங்களாக குவிய வாழ்த்துக்கள்.


More Cinema News