2018ம் ஆண்டின் சிறந்த நடிகர், நடிகை தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தேசிய விருது வழங்கும் விழா கடந்த 23-ந் தேதி புது டெல்லியில் நடந்தது. வழக்கமாக இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவது வழக்கம்.
இம்முறை அவர் பல்கலைக் கழக விழா ஒன்றில் கலந்துகொண்டதால் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருதுகளை வழங்கினார்.
சிறந்த நடிகைக்கான விருதினை கீர்த்தி சுரேஷ் பெற்றார். அதேபோல்மற்ற கலைஞர்களும் விருது பெற்றுகொண்டனர்.
நடிகர் அமிதப் பச்சனுக்கு தாதா செகேப் விருது அறிவிக்கப் பட்டிருந்தது. காய்ச்சல் காரணமாக அவர் அன்றைய தினம் வரவில்லை. அவருக்கு 29ம் தேதி ஜானாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் ஜனாதிபதி விருதினை வழங்குவார் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தாதா சாகேப் பால்கே விருதினை அமிதாப்பச்சனுக்கு வழங்கினார். தாதா சாகேப் விருது ஒரு தங்க தாமரை பதக்கம், ரூ.10 லட்சம் ரொக்கம் பரிசினை கொண்டது.
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அமிதாப் பச்சன் மனைவி ஜெயா பச்சன், மகன் அபிஷேக்பச்சன் விழாவில் கலந்து கொண்டனர்.