இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோன் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார். இந்தி நடிகர் ரன் வீர் சிங்கை காதலித்து மணந்திருக்கிறார் தீபிகா. அதற்கு முன்னதாக அவர் ரன்பீர் கபூரை காதலித்தார்.
இருவரும் பல இடங்க ளுக்கு டேட்டிங் சென்றனர். காதலின் அடையாளமாக ரன்பீர் கபூர் பெயரை தனது முதுகின் மேற்புறப் பகுதி யில் அழிக்க முடியாதளவுக்கு நிரந்தரமான டாட்டூ அதாவது பச்சை குத்திக்கொண்டார். ஆனால் ரன்பீர், தீபிகா காதல் தோல்வியில் முடிந்தது. பின்னர்தான் ரன்வீர் சிங்கை காதலித்து மணந்தார் தீபிகா.
ரன்பீர் கபூர் பெயரை டாட்டூவாக குத்தியிருந்த தீபிகா தற்போது அதை அழித்திருக்கிறார். இதற்காக பிரத்யேக தோல் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதில் டாட்டூ முற்றிலுமாக அழிக்கப்பட்டது. ரன்பீர் கபூர் தற்போது இந்தி நடிகை அலியாபட்டை காதலித்து வருகிறார்.