தளபதி 64 நடிகைக்குள் ஒளிந்திருக்கும் திறமை.. வனவிலங்கு வாழ்க்கை ஆராய்ச்சி செய்கிறார்..

by Chandru, Dec 31, 2019, 18:56 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது தளபதி 64 படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். நடிப்பை தவிர மாளவிகா மோகனனுக்குள் இன்னொரு திறமை ஒளிந்திருக்கிறது.

வனவிலங்குகளை பிரத்யேகமாக புகைப்படம் எடுப்பதிலும் அவற்றின் வாழ்க்கையை ஆராய்வதிலும் ஆர்வம் காட்டுகிறார் மாளவிகா. இதற்காக பல்வேறு காடுகளுக்கு சென்று வலம் வந்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,'கடந்த 2 வருடமாக வனவிலங்குகளை படமாக்குவதில் எனது ஆர்வத்தை அதிகம் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். நாடுமுழு வதும் பல்வேறு காடுகளுக்கு சென்று விலங்குகளின் வாழ்வியல்பற்றி அறிந்திருக்கிறேன். கபிணி, மாசினங்கடி, வயநாடு போன்ற இடங்கள் மறக்க முடியாதவை. ஆப்ரிகா காடுகளுக்கும் சென்று வந்திருக்கிறேன். அதெல்லாம் ஒரு த்ரில்லான அனுபவம்' என்றார்.


More Cinema News

அதிகம் படித்தவை