பாபநாசம் நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம்.. முற்றுப்புள்ளி வைத்த சிபிஐ..

by Chandru, Dec 31, 2019, 19:01 PM IST
Share Tweet Whatsapp

விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் யானை, பாம்பு என பல்வேறு விலங்குகள்போல் மிமிகிரி செய்து வில்லன் வேடத்தில் நடித்தவர் கலாபவன் மணி. புதிய கீதை, பாபாநாசம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளம், தெலுங்கிலும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 3 வருடங்களுக்கு முன் கலாபவன் மணி திடீர் மரணம் அடைந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளிக்கப்பட்டது. மதுவில் விஷம் கொடுத்து அவர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. கேரள சாலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கேரளா ஐகோர்ட் உத்தர விட்டது.

இதுதொடர்பாக ஏர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணை நேற்று அறிக்கை தாக்கல் செய்தது. நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. கல்லீரல் நோய் பாதிப்பு இருந்த நிலையில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் மரணம் ஏற்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Leave a reply