அசுரன் நடிகை மஞ்சுவாரியர் திடீர் ஆவேசம்.. ”உங்களுடன் நான் இருக்கிறேன்”

by Chandru, Jan 7, 2020, 22:00 PM IST
Share Tweet Whatsapp

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கடந்த சில தினங் களுக்கு முன் முகமூடி அணிந்தவர்கள் வளாகத்திற்குள் நுழைந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தாக்கினர்.

இச்சம்பவம் குறித்து இந்தி நடிகை தீபிகா படுகோன், நடிகை டாப்ஸி உள்ளிட்ட பலர் அதிர்ச்சியும் கண்டனமும் தெரிவித்துள்ளனர். அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் தனது கருத்தை நெட்டில் வெளிப்படுத்தி உள்ளார்.

"ஜே.என்.யுவில் நடந்த தாக்குதலில் ரத்தம் சிந்திய முகங்களை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சுமர் 3 மணி நேரம் அவர்கள் தாக்கப்பட்டனர். ஜே.என்.யு என்பது நாட்டின் அறிவின் அடையாளமாக இருந்தது. அறிவிற் சிறந்தவர்கள் மட்டுமே அங்கு படிக்க முடியும். இப்போது கூட நிறுவனத்தின் பல தயாரிப் புகள் எங்களை வழிநடத்துகின்றன, ஆளுகின்றன. அவர்களின் அரசியல் நிலைப் பாடுகள் வேறுபட்டிருந்தாலும் அவர்களின் தேசபக்தி கேள்விக்குறியாக வில்லை.

இந்த தாக்குதலில் பாதிகப்பட்ட பிள்ளை களின் பெற்றோர் சாதாரண மனிதர்கள்தான். தாக்குதலில் காயம் அடைந்து ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கும் முகங்களைக் காணும்போது, அந்தத் தாய்மார்களின் மனநிலை என்னவாக இருக்கும்? எங்களால் உதவ முடியவில்லை, ஆனால் அந்த பிள்ளைகளுக்கு ஆறுதலாக உடனிருக்க முடியவில்லை. நான் உங்களுடன் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Leave a reply