ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாக்கி நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன். தமிழில் பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் வில்லனாக நடித்தவர்.
இதுபற்றி பார்த்திபனிடம் கேட்டபோது,'ஒத்த செருப்பு இந்தி ரீமேக்கில் ஆமிர் கானை நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. அவர் வேறு படங்களில் பிஸியாக இருப்பதால் இதில் நடிக்க முடியவில்லை. பின்னர் தயாரிப்பா ளரிடம் யாரை நடிக்க வைப்பது என்று பேசிய போது நடிப்பு திறமை வாய்ந்த நவாசுதின் சித்திக் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். இதையடுத்து அவரை சந்தித்தோம். அவரது நண்பர்களும், உதவியாளர்களும் ஒத்த செருப்பு படத்தை பார்த்தார்கள். விரைவில் நவாஸ்சுதினும் பார்க்கிறார். அவரது கமென்ட் என்ன என்பது இனிதான் தெரியவரும். இதில் நடிக்க அவர் பொருத்தமான நடிகர்.
இந்தியில் ஒத்த செருப்பு படத்தின் வசனம் எழுதும் பணி நடக்கிறது. நவாசுதின் நடிக்க ஒப்புதல் கொடுத்தால் உடனடியாக படப் பிடிப்பை தொடங்க தயாராக இருக்கிறேன். இந்த படத்தோடு நான் பல வருடங்களாக வாழ்ந்திருக்கிறேன். இதற்கு தயாராக எனக்கு இதற்கு மேலும் நேரம் தேவையில்லை' என்றார்.
இதற்கிடையில் பார்த்திபன் ஒரே ஷாட்டில் படமாகவிருக்கும் இரவின் நிழல் படத்தின் பணிகளில் பிஸியாக இருக்கிறார்.