மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் கர்ணன் ஆகிறார் தனுஷ்..

by Chandru, Jan 7, 2020, 22:09 PM IST

கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்திற்கு கர்ணன் என பெயரிட உள்ளதாக நெட்டில் தகவல் பரவியது. ஆனால் அதைபட தரப்பு உறுதி செய்யாமலிருந்தது. இந்நிலையில தனுஷ் நடிக்கும் படத்துக்கு கர்ணன் என பெயரிட்டி ருப்பதாக அறிவித்துள்ள பட தயாரிப்பாளர் எஸ்.தாணு, 'கர்ணன் அன்பு, இரக்கம் கருணை உள்ளவர் மட்டுமல்ல வெற்றியையும் தருபவர்! தொடர் படப்பிடிப்பில்...' என தெரிவித்துள்ளார்.

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் பிரச்னை கடந்த சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேசப்பட்டது. போலீஸ் புகார், வழக்கு, கைது என பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அரசியல் கட்சிகளும் இப்பிரச்னையை முன்வைத்து போராட்டங்கள் நடத்தி உள்ளது. இந்த உண்மை சம்பவங்களை மையமாக வைத்து கர்ணன் கதை அமைக்கப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


More Cinema News

அதிகம் படித்தவை