அடையாளம் தெரியாமல் மாறும் திலீப்.. நியூமராலஜிப்படிபெயர் மாற்றம்?

by Chandru, Jan 7, 2020, 22:15 PM IST

நடிகை கடத்தல் வழக்கில் கைதான மலை யாள நடிகர் திலீப் பின்னர் ஜாமினில் வெளி யில் வந்தார். வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகி றார். 70 வயது முதியவராக முற்றிலும் அடை யாளமே தெரியாத வகையில் மேக் அப் அணிந்து 'கேசு இ வீட்டின்டே நாதன்' என்ற படத்தில் நடிக்கிறார். சமீபத்தில் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அடை யாளம் காணமுடியாத அளவுக்கு முதிர்ச்சி யான தோற்றத்தில் இருந்தார் திலீப். இப்படத் தை அவரது பள்ளி நண்பர் நாதிர்ஷா இயக்குகிறார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டரில் வழக்கமாக இருக்கும் திலீப்பின் பெயருக்கான ஆங்கில எழுத்தில் கூடுதலாக 'i' என்ற ஆங்கில எழுத்து சேர்க்கப்பட்டிருந்தது. இதையடுத்து திலீப்பும் நியூமராலஜிப்படி தனது பெயரை மாற்றி இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்திருக்கும் இயக்குனர், 'படிக்கும் காலத்தில் திலீப்பும் நானும் இணைந்து காமெடி கேசட்டு வெளியிடுவோம் அப்போது திலீப் பெயரில் கூடுதலாக ' i' என்ற ஆங்கில லெட்டரை எழுதுவது வழக்கம். அதை தற்போது படத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தேன்' என்றார்.

ஆனாலும் பெயர் மாற்றமிருந்தால் ஏற்கென வே சிக்கியிருக்கும் வம்பு வழக்கிலிருந்து விடுபட்டு நிம்மதியான வாழ்க்கை அமையும் என்று சிலர் சொல்லியிருப்பதால் தனது பெயரை திலீப் மாற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Leave a reply