7 ஆயிரம் தியேட்டரில் தர்பார் நாளை ரிலீஸ்.. கிளைமாக்ஸில் ரஜினி வெறித்தனம்..

by Chandru, Jan 8, 2020, 22:06 PM IST

ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'தர்பார்' படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது.

நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டரில் வெளியிடப்படுவ தாக படத்தை தயாரிக்கும் லைகா நிறுவன எக்ஸிகி யுடிவ் தயாரிப்பாளர் சுந்தர்ராஜன் கூறி உள்ளார்.
மேலும் அவர் கூறும்போது,'தர்பார் படத்தை விளம்பரப்படுத்த மட்டுமே சுமார் ரூ. 15 கோடிக்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களிலும், இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களிலும் தர்பார் வெளியா கிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி வெறி பிடித்ததுபோல் ஆக்ரோஷமாக நடித்திருப்பது பரபரப்பாக பேசப்படும்' என்றார்.

You'r reading 7 ஆயிரம் தியேட்டரில் தர்பார் நாளை ரிலீஸ்.. கிளைமாக்ஸில் ரஜினி வெறித்தனம்.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை