”டக்கர்” சித்தார்த் படத்தில் யோகிபாபு டபுள் ஆக்‌ஷன்.. ஈகோ கிளாஷ் படம்..

by Chandru, Jan 13, 2020, 22:02 PM IST
Share Tweet Whatsapp

தமிழ் சினிமாவில் முக்கால்வாசி படங்களில் யோகிபாபு நடித்துக்கொண்டிருக்கிறார். காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் சில படங்களில் நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் படம் “டக்கர்”.

இதில் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா மகன் என இருதோற்றங்களில் யோகிபாபு வரும்போது அரங்கம் கலகலக்கும் என்கிறார் இயக்குனர்.

சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் கதாநாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்கிறது இப்படம். இதில் திவ்யான்ஷா கௌஷிக், அபிமன்யு சிங், முனீஷ்காந்த், ஆர்ஜே. விக்னேஷ் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஃபேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் படத்தை தயாரிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் படத்தொகுப்பு செய்கிறார்.


Leave a reply