ராஷ்மிகாவுடன் டேட்டிங் ஆசையில் ஹரிஷ்.. ரைசா என்ன ஆனார்?

by Chandru, Jan 16, 2020, 16:49 PM IST
Share Tweet Whatsapp

பியார் பிரேமா காதல் படத்தில் ஜோடியாக நடித்த ஹரிஷ் கல்யாண், ரைசா பற்றி அவ்வப்போது காதல் கிசுகிசு உலா வருகிறது. கடந்த மாதம் ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய ஆசையாக இருப்பதாக ரைசா கூறினார். இதுபரபரப்பானது. இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் கெஸ்ட் ரோலில் ரைசா நடித்திருந்தார்.

சமீபத்தில் திரைப்பட விருது நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கல்யாண் பங்கேற்றார். அவரிடம் நித்யானந்தாவின் கைலாசாவிற்கு சென்று செட்டிலாவதாக இருந்தால் யாருடன் செல்வீர்கள் என்று ஹரிஷிடம் கேட்டனர். அதற்கு பதில் அளித்தவர்,' கைலாசா தீவுக்குச் சென்றால், நடிகை ராஷ்மிகா மந்தனாவுடன்தான் செல்வேன். அவரைத்தான் இப்போது எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது. அவரோடு கைலாசா தீவில் செட்டில் ஆவேன்' என்றார் ஹரிஷ்.

ஜாலியாக ஹரிஷ் இதைச் சொன்னாரா அல்லது ராஷ்மிகா மீது காதல் வயப்பட்டு இப்படி சொன்னாரா என்று தெளிவாகவில்லையென்றாலும் உங்க பிக்பாஸ் தோழி ரைசா என்னவானார், டேட்டிங் போக உங்களுக்கு அழைப்பு விடுத்தாரே அதற்கு என்ன பதில்' என ஹரிஷை நெட்டிஸ்ன்கள் கேள்விமேல் கேள்வி கேட்டு வருகின்றனர்.


Leave a reply