எம்.ஜி.ஆர் வேடம் அணிந்த அரவிந்த்சாமி.. நான் உங்கள் வீட்டு பிள்ளை.. பாடலுக்கு நடனம்..

by Chandru, Jan 17, 2020, 16:12 PM IST

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை "தலைவி" என்ற பெயரில் உருவாகிறது. ஏ.எல். விஜய் இயக்குகிறார். ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இப்படத் தில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். அவர் நடித்த காட்சிகள் படமாகி வருகிறது.

எம்ஜிஆரின் பிறந்தநாளையொட்டி 'தலைவி' படத்தில் எம்ஜிஆர் போல் மேக்அப் அணிந்த அரவிந்த்சாமியின் புகைப் படங்கள் வெளி யிடப்பட்டுள்ளது. அவற்றை தனது டிவிட்டர் பக்கத்திலும் அரவிந்த்சாமி வெளியிட்டுள் ளார். ஏற்கனவே ஜெயலலிதா தோற்றத்தில் கங்கனா நடித்த காட்சிகளின் டீஸர் வெளியான நிலையில் தற்போது எம்ஜிஆர்போல் வேடம் அணிந்து புதிய பூமி படத்தில் எம்ஜிஆர் நடித்த 'நான் உங்கள் வீட்டுப் பிள்ளை..' பாடல் காட்சியில் அரவிந்த்சாமி நடித்த டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. அசப்பில் எம்ஜிஆர் போலவே நடித்திருப்பதாக பலரும் பாராட்டினாலும் எம்ஜிஆரின் வேகத்தை அரவிந்த்சாமியால் ஈடுகட்ட முடியவில்லை என்று சிலர் குறைபட்டுக்கொண்டுள்ளனர்.


More Cinema News

அதிகம் படித்தவை