ராஷ்மிகா வீட்டில் வருமான வரி சோதனை.. கைப்பற்றியது என்ன?

by Chandru, Jan 17, 2020, 16:17 PM IST

டியர் காம்ரேட் படத்தில் விஜயதேவர கொண்டா ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா மன்தன்னா. துடிப்பான நடிகையான ராஷ்மிகா நடித்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது. சில தினங்களுக்கு முன் தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் நடித்த சரிலேனு நீக்கெவ்வரு படம் திரைக்கு வந்து வெற்றிகர மாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது தமிழில் சுல்தான் என்ற படத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது சம்பளத்தை உயர்த்தியதாக தகவல் வெளியானது. ராஷ்மிகா தெலுங்கு படங்களில் நடித்தாலும் அவரது வீடு கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ளது. கன்னட படங்களில் நடித்து வந்தவர் திடீரென்று தெலுங்கில் நடிக்க வர அவரது மார்க்கெட் சூடுபிடித்துக்கொண்டது.

ராஷ்மிகாவின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். அவரும் சினிமா துறையிலும் உள்ளார். ராஷ்மிகா பல படங் களில் நடித்து வரும் நிலையில் அவரது வருமானமும் எகிறிக்கொண்டே போகிறது. இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்திருக்கிறாரா என்பதை அறிய வருமான வரி துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் பணம், நகை சிக்கியதாவும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது வழக்கமான சோதனைதான் என்று ராஷ்மிகா கூறினார்.

முன்னதாக சென்ற வாரம் நடிகை லாவண்யா திரிபாதி வீட்டில் வருமான வரி துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினார்கள் என்பது குறிப்பிட்டதக்கது. பிரபல நடிகைகள் வீடுகளில் ரெய்டு நடந்திருப்பதால் மற்ற நடிகைகளும் தங்கள் வீட்டில் ரெய்டு நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.


More Cinema News