மலேசியாவில் சிம்பு கூட்டும் மாநாடு பாரதிராஜா, எஸ்.ஏ.சி. பரபர அறிவிப்பு..

by Chandru, Jan 17, 2020, 16:19 PM IST

நடிகர் சிம்பு நடிக்கும் 'மாநாடு படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு திரைப்பட மாவது உறுதியாகி இருக்கிறது. வெங்கட்பிரபு இயக்கும் இப்படத்தில் முதலில் நடிப்பதாக கூறியிருந்த சிம்பு பின்னர் பட தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மனக்சப்பால் விலகினார்.

இந்த பிரச்னை தயாரிப்பாளர் சங்கம் வரை புகாராக சென்றது. எல்லா சர்ச்சைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்த நிலையில் மாநாடு விரைவில் தொடங்கவிருக்கிறது.
இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகரன், நடிகர் கருணாகரன் ஆகியோர் நடிக்கின்றனர். கதாநாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். முக்கிய வேடத்தில் பிரேம்ஜி நடிக்க உள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 22ம் தேதி மலேசியாவில் தொடங்க உள்ளது.


Leave a reply