மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்த மம்மூட்டி... காரணம் என்ன தெரியுமா?

by Chandru, Jan 22, 2020, 19:07 PM IST

மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், சரத்குமார், ஜெயம்ரவி, கார்த்தி, ஜெயராம், ஐஸ்வர்யாராய், திரிஷா, அதிதிராவ் ஐதரி, ஐஸ்வர்யா லட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கின்றனர். இதன் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இப்படத்தில் இதுவரை முடிவான நட்சத்திரங்களை தவிர இன்னும் ஏராளமான கதாபாத்திரங்களுக்கு நடிகர், நடிகைகள் தேர்வாக வேண்டி உள்ளது. அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

நாவலில் பழுவேட்டரையர் கதாபாத்திரமும் முக்கியமாக இடம்பெற்றுள்ளது. இந்த வேடத்தில் சத்யராஜ் நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷீட் மற்றும் சம்பள பிரச்னை காரணமாக நடிக்க மறுத்து விலகினார். மம்மூட்டியை நடிக்க அணுகினர். அவர் பொன்னியின் செல்வன் நாவலை படித்துவிட்டு பழுவேட்டையார் வேடத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். பின்னர் திரைக்கதையில் அந்த கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் குறைக்கப் பட்டிருந்ததை அறிந்ததும் அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம் மம்மூட்டி.க்கு பதிலாக இப்போது வேறு ஆளை தேடிக்கொண்டிருக்கிறது படக்குழு.


More Cinema News