அரிவாளால் கேக் வெட்டி நடிகர் கொண்டாடிய பர்த்டே.. வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி..

by எஸ். எம். கணபதி, Jan 24, 2020, 20:52 PM IST
Share Tweet Whatsapp

ரவுடிகள் அவ்வப்போது தங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவதாக சொல்லி பார்ட்டி வைத்து சரக்கு அடித்து கும்மாளம்போடுவதுடன் பெரிய சைஸ் கேக் வாங்கி வந்து அதை அரிவாள் அல்லது பெரிய கத்தியை கொண்டு வெட்டி அட்டகாசம் செய்வதுண்டு. அப்படி செய்த ஒரு சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஒருவரே தனது பிறந்த நாளன்று அரிவாளால் கேக் வெட்டி விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னடத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் விஜய். 2007ம் ஆண்டு துன்யா என்ற படத்தில் நடித்தார். அப்படம் வெற்றியாக அமைந்தது, இதையடுத்து தனது பெயருக்கு முன்னால் அந்த படத்தின் பெயரை இணைத்துக் கொண்டு துன்யா விஜய் ஆனார். சந்தா, ஜங்கிலி போன்ற ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு 46வது வயது பிறந்தது.

பெங்களூர் ஹோசரகள்ளியில் உள்ளியாவில் துனியா விஜய் வீடு உள்ளது. அங்கு தனது உறவினர்கள், நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடினார். பெரிய சைஸ் கேக் ஒன்றை தனது தாய் உடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி விழாவை தடபுடலாக்கினார். இந்த வீடியோ இணைய தளத்தில் வெளியானது.
துனியா விஜய் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாட்டம்போட்ட வீடியோவை கண்ட பெங்களூரு போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். நேரடியாக போலீஸ் நிலையத்துக்கு வந்து இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டிருக்கின்றனர்.


Leave a reply