சாலையில் நடந்தவர்களை கட்டிப்பிடித்த நடிகை.. இளைஞர்கள் குதூகலம்..

by Chandru, Jan 24, 2020, 20:48 PM IST

தாய்மார்கள் தினம், காதலர் தினம் போல் தேசிய கட்டிப்பிடி தினம் (நேஷனல் ஹக்கிங் டே) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இது பரவலாக நடந்தாலும் இந்தியாவில் கடைபிடித்ததுபோல் தெரியவில்லை. அதை நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறார் நடிகை ரிச்சா சத்ஹா.

இவர் இந்தி நடிகை. சர்பஜித், செக்ஸன் 375, லவ் சோனியா, இஷ்குரியா உள்ளிட்ட பல இந்தி படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பிட்ட தினத்தில் கையில் ஃப்ரி ஹக் (இலவசமாக கட்டிப்பிடி) என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் நடுரோடுக்கு வந்தவர் அப்பகுதியில் சென்ற சிறுவர்கள், பெண்களை கட்டிப்பிடித்து வாழ்த்தினார். அதைப்பார்த்து ஏங்கிய வாலிபர்களுக்கும் இந்த பாக்யம் கிடைத்தது. அவர்களையும் கட்டித்தழுவி வாழ்த்தினார்.

'இன்றைக்கு வெறுப்பு அதிகரித்திருக்கிறது. இருட்டை இருட்டால் விரட்ட முடியாது. அதற்கு வெளிச்சம் வேண்டும் என்றார் மார்டின் லுதர் கிங். அதுபோல் ஒரு ஒளியை நான் பாய்ச்ச எண்ணினேன். அதற்கு கட்டிப்பிடி தினத்தை பயன்படுத்திக் கொண்டு எல்லோரிடமும் அன்பு பாராட்டினேன். வழிப்போக்கர்களை நான் கட்டிபிடித்தது ஒரு மேஜிக். பெண் ஒருவரை கட்டிப்பிடித்தபோது அவர் நெகிழ்ந்துபோனார். ஒருவரையொருவர் கட்டித்தழுவி ஒருவருகொரு வர் ஆதரவாக இருக்கிறோம் என்ற நம்பிக்கை தர வேண்டும். இனி ஒவ்வொரு ஆண்டும் இதை செய்வேன். நீங்களும் அடுத்த வருடம் என்னுடன் இணைந்து கட்டிப்பிடி வைத்தியம் தரலாம். எல்லோரிடமும் அன்பை பரப்புங்கள்' என்றார் ரிச்சா சத்ஹா.


More Cinema News