நடிகர் சங்க வழக்கு உச்ச நீதிமன்றம் செல்கிறது.. விஷால்- நாசர் முடிவு..

by Chandru, Jan 25, 2020, 17:10 PM IST

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து ஐகோர்ட் தீர்ப்பு அளித்ததுடன் புதிதாக நடிகர் சங்க உறுப்பினர்கள் பட்டியல் தயாரித்து 3 மாதத்தில் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். மறுதேர்தல் நடத்தி முடிக்கும்வரை நடிகர் சங்கத்தை சிறப்பு அதிகாரி கீதா தொடர்ந்து கவனிக்கலாம் என ஐகோட் உத்தரவிட்டது.

இதுபற்றி ஐசரி கணேஷ் கூறும்போது,இந்த தீர்ப்பின் மூலம் நீதி, நியாயம், தர்மம் வென்றுள்ளது. மறுதேர்தலை சந்திக்கத் தயாராக இருக்கிறோம். நடிகர் சங்க கட்டிடம் கட்டப்பட்டு நாடக நடிகர்கள் பயன் பெற வேண்டும். முறையற்ற வகையில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். புதிதாக நடக்கவிருக்கும் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என தெரிவித்தார்.

விஷால். நாசர் தரப்பினர் நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Leave a reply