வரலட்சுமி 25 படத்தை முடித்தது எப்படி? எதிர்மறை கருத்து சொன்னவர்களுக்கு நன்றி..

by Chandru, Jan 26, 2020, 20:08 PM IST

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர் பின்னர் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்தார். விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். குறுகிய காலத்தில் அவர் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இதுகுறித்து வரலட்சுமி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
அவர் கூறியிருப்பதாவது: இதுவொரு நீண்ட கடினமான பயணம். நல்ல விஷயங்களை அடைவது அவ்வளவு சுலபம் அல்ல என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. ஆனால் கண்டிப்பாக கனவுகள் ஒருநாள் நிஜமாகும் என்ற நம்பிக்கை இருந்தது. எனது சிறந்த திறனில் நான் வேலை செய்திருக்கி றேன். இந்த கட்டத்தை எட்ட நான் பல சவால்களை சந்தித்து உள்ளேன். இப்போது நான் 25 படங்களில் நடித்து முடித்துள்ளேன். என்பதே பெரிய அளவு கோலாக எனக்கு தெரிகிறது.

என்ன நடந்தாலும் என்னுடன் நின்று என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் பக்கம் நின்று என் ஊக்கத்தைத் தடுத்தவர்களுக்கும் நன்றி. ஏனென்றால் உங்கள் எதிர்மறை எண்ணம் என்னை இன்னும் வலிமை ஆக்கியது. உங்களை தவறென்று நிரூபிக்க இன்னும் பிடிவாதமாக என்னை நிற்க வைத்தது. என்னை ஆதரித்து அன்பு காட்டிய ரசிகர்களுக்கு மிகவும் நன்றி.
இவ்வாறு வரலட்சுமிசரத்குமார் தெரிவித்திருக்கிறார்.


Leave a reply