இந்திக்கு வரும் டைட்டானிக் ஹீரோ.. தமிழிலும் நடிக்கவைக்க முயற்சி..

by Chandru, Jan 26, 2020, 20:12 PM IST

டைட்டானிக் பட ஹீரோ லியோனர்டோ டிகாப்ரியோ. இவர் இந்திய படங்களில் நடிக்க அவர் ஆர்வம் காட்டுகிறாராம். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கவும் பேச்சு நடத்தி வருகின்றனர். விரைவில் இப்படம் குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சென்னையில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது அதற்காக தனது டிவிட்டர் பக்கத்தில் ஆதங்கம் தெரிவித்து கருத்து வெளியிட்டவர் டிகாப்ரியோ. தமிழில் டிகாப்ரியோவை நடிக்க வைக்கவும் சில இயக்குனர்கள் யோசித்து வருகின்றனர். யோசனையோடு சும்மா இருந்துவிடாமல் நல்ல ஸ்கிரிப்டுடன் அவரை அணுகினால் கால்ஷிட்டை அள்ளிக்கொண்டு வரலாம் என்கின்றது கோலிவுட் வட்டாரம். இதற்கிடையில் டிகாப்ரியோ இந்தியில் நடிக்கவிருப்பதை அறிந்து தமிழிலும் அவரை நடிக்க கேட்டு சிலர் அணுகியிருக்கிறார்களாம்.


Leave a reply