அஜீத் பட ரீமேக்கில் ரஜினி மகள் நடிக்கிறார்..

by Chandru, Jan 27, 2020, 18:56 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தில் அவரது மகளாக நடித்தவர் நிவேதா தாமஸ்.

இவர் தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் அஜீத்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. அஜீத் நடித்த வழக்கறிஞர் வேடத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

தமிழில் ஷரத்தாதாஸ் நடித்த வேடத்தை தெலுங்கில் நிவேதா தாமஸ் ஏற்று நடிக்கிறார். இவர் ஏற்கனவே பாபநாசம் படத்தில் கமலின் மகளாகவும், ஜில்லா படத்தில் விஜய்யின் தங்கையாகவும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a reply