குழந்தைகளுக்காக சமந்தா தொடங்கிய கல்வி பயிற்சி.. பள்ளி செல்லும் முன் டிரெய்னிங்..

by Chandru, Jan 28, 2020, 18:45 PM IST
Share Tweet Whatsapp

நடிகை சமந்தா கடந்த ஆண்டு விஜய்சேதுபதி நடித்த சூப்பர்டீலக்ஸ் படத்தில் நடித்தார். இந்நிலையில் விஜய்சேதுபதி தமிழில் நடித்த 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து வருகிறார். 96 படத்தில் தமிழில் திரிஷா ஏற்று நடித்த வேடத்தை சமந்தா தெலுங்கில் ஏற்றிருக்கிறார்.

படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்துக் கொண்டிருக்கும் சமந்தா , தி பேமலி மேன் என்ற வெப் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தான் நடத்தி வரும் பிரதியூஷா என்ற அறக்கட்டளை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ செலவுக்கு உதவி வருகிறார். தற்போது ஏகம் என்ற பெயரில் கல்வி சேவை மையம் தொடங்கி உள்ளார். ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் தொடங்கப்பட்டிருக்கும் இந்த மையத்தில் குழந்தைகளுக்கு பள்ளி செல்வதற்கு முன் அதற்கான கல்வி பயிற்சி அளிக்கப்படுகிறது. நண்பர்கள், தோழிகளின் உதவியுடன் இந்த கல்வி மையத்தை தொடங்கி உள்ளார் சமந்தா.


Leave a reply