பாலிவுட் பாட்ஷா என்று ஷாருக்கானை அவரது ரசிகர்கள் அழைக்கிறார்கள். மும்பையில் நடந்த டிவி நடன நிகழ்ச்சியில் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஷாருக்.
அப்போது அவர் பேசியதாவது:
என் மனைவி இந்து, நான் முஸ்லிம். எங்கள் குழந்தைகள் இந்தியர்கள். நாங்கள் இந்து, முஸ்லிம் பிரச்சினை பற்றி எப்போதுமே எங்கள் குடும்பத்தில் பேசியது இல்லை. ஒருசமயம் என் மகள் பள்ளி விண்ணப்ப படிவம் கொண்டுவந்தாள். அதில் மதம் குறித்த கேள்வி கேட்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் என்ன பதில் எழுதுவது எனக் கேட்டார். நாம் எந்த மதத்தையும் சேர்ந்தவர்கள் கிடையாது. நாம் எல்லோரும் இந்தியர்கள் என சொல்லி இந்தியன் என்ற வார்த்தையை விண்ணப்பத்தில் எழுதினேன்' என்றார்.
உலக நாயகன் கமல்ஹாசனுக்கும் பல வருடங்களுக்கு முன் இப்படியொரு நிலை ஏற்பட்டது. தன் மகளை பள்ளியில் சேர்க்கும் போது என்ன சாதி என்று கேட்ட கேள்விக்கு இந்தியன் என்று மட்டும் எழுதுங்கள் இல்லாவிட்டால் இந்த பள்ளியில் என் மகளுக்கு சீட்டே வேண்டாம் என்று வாதாடினார். அவரது அந்த வாதத்தை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. அதே பாணியைத்தான் தற்போது ஷாருக்கான் பின்பற்றியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.