நடிகை பிரியா பவானி உருக்கமான காதல் கடிதம்.. என் வாழ்வில் சூரியனாக நீ இருப்பாய்..

by Chandru, Jan 28, 2020, 18:49 PM IST

மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். சமீபத்தில் இவரிடம், எஸ்.ஜே.சூர்யா தனது காதலை சொன்னதாகவும் அதை வயது வித்தியாசம் காரணமாக பிரியா ஏற்க மறுத்து விட்டதாகவும் கிசுகிசு வெளியானது. அதனை எஸ்.ஜே.சூர்யா மறுத்ததுடன் வதந்தி பரப்பிய வர்களை முட்டாள்கள் என திட்டித்தீர்த்தார். இந்நிலையில் பிரியா பவானி தனது இன்ஸ்டா கிராம் பக்கத்தில் இளைஞர் ஒருவருடன் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

இதுகுறித்து பிரியா கூறியிருப்பதாவது:

10 வருடத்துக்கு முன் கல்லூரியில் படித்தபோது சராசரி ரகம் என்று சொல்லக்கூடிய அழகில் கவர்ச்சி குறைந்த நிலையில் இருந்த என் மீது நீ காதல் கொண்டு அந்த காதலை என்னிடம் பகிர்ந்தபோது எனக்கு ஆச்சர்யம் இருந்த தில்லை. இன்றைக்கும் என்னிடம் அதே அன்பு மாறாமல் இருப்பது என்னை ஆச்சர்யம் அடையச் செய்கிறது.

நீ, நான் கேட்க மறந்த இசை காயங்களை மறக்க புதிய காதலின் கிளர்ச்சி தேவை யில்லை சூழ்நிலைக்கு மாறாத அன்புபோதும் என்றிருக்கும் பேராண்மை. எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால் அவள் வாழ்க்கையில் உன்னை மாதிரி ஒரு ஆண் இருக்கனும்னு நான் கடவுளை கேட்கிறேன். என் உலகத்தில் நட்சத்திரங்கள் நிறைந்திருந்தாலும் சூரியனாக நீதான் இருப்பாய். புத்தாண்டு வாழ்த்துக்கள் மா.
இவ்வாறு பிரியா பவானி கூறி உள்ளார்.


Leave a reply