திரையுலகில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசன் பள்ளி படிப்பு மட்டுமே முடித்தவர். ஆனால் அவருக்கு தெரியாத கலைகள் இல்லை எனலாம். படங்களில் நடிக்க சென்னை வந்த அவர் புரசை வாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்தார். இன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி அரசியலிலும் கட்சி தலைவராகவும் இருக்கிறார்.
சமீபத்தில் குடும்ப அங்கத்தினர்களை சந்தித்த கமலுக்கு பள்ளிப் பருவ ஞாபகம் வந்துவிட்டது. அவர்கள் அனைவரையும் சமீபத்தில் தாங்கள் படித்த பள்ளியில் சந்தித்தார்.
1970ம் ஆண்டில் மாணவர்கள் அன்றைக்கு அணிந்த காக்கி பேண்ட் வெள்ளை சட்டை சீருடையுடன் ரீயூனியன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பள்ளி பருவ நாட்கள் பற்றி அவர்களிடம் பேசி மகிழ்ந்த கமல் பின்னர் சிறிது நேரம் அவர்களுடன் விளையாடினார். உடன் அமர்ந்து குருப் போட்டோ எடுத்துக்கொண்டார். அனைவருக்கும் நினைவு பரிசு வழங்கினார். நீண்ட சந்திப்புக்கு பிறகு அனைவரும் விடை பெற்று சென்றனர்.